பிராம்ப்டன் பாடசாலையில் கத்திக்குத்து – மாணவருக்கு காயம்!

பிராம்ப்டனில் உள்ள உயர்நிலை பாடசாலை ஒன்றினுள் வெள்ளிக்கிழமை காலை மாணவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வெள்ளிக்கிழமை காலை 8:24 மணியளவில் McMurchy Avenue South மற்றும் Elgin Drive பகுதியில் அமைந்துள்ள பிராம்ப்டன் சென்டேனியல் (Brampton Centennial) உயர்நிலைப்பள்ளியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அங்கு பதின்ம வயது மாணவர் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் மீட்கப்பட்டார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பிராம்ப்டன் சென்டேனியல் பள்ளி உடனடியாக மூடப்பட்டது.

அருகில் உள்ள பிஷப் பிரான்சிஸ் கத்தோலிக்கப் பாடசாலையும் (Bishop Francis Catholic School) தற்காலிகமாகப் பாதுகாப்பு வளையத்திற்குள் (Hold-and-secure) கொண்டுவரப்பட்டது.

காலை 9:30 மணியளவில் இந்த எச்சரிக்கைகள் விலக்கப்பட்டன.

தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பியோடிய சந்தேக நபரான இளைஞரை பீல் பிராந்திய பொலிஸார் (Peel Regional Police – PRP) சற்று நேரத்தில் கைது செய்தனர்.

காயமடைந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உயிருக்கு ஆபத்து ஏதுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு தனிப்பட்ட மோதல் என்றும், பொதுமக்களுக்கு வேறு அச்சுறுத்தல் இல்லை என்றும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Video thumbnail
தாய் ஒருவர் உட்பட 4 உயிர்களைப் பறித்த விபத்து!
01:28
Video thumbnail
பிராம்ப்டனின் புதிய முகம் - மருத்துவக் கண்டுபிடிப்புகளின் மையமாக மாறும் மாநகரம்!
01:21
Video thumbnail
பிராம்ப்டன் பாடசாலையில் கத்திக்குத்து - மாணவருக்கு காயம்!
01:21
Video thumbnail
சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்தல் – சிறைக்காவலர் சத்தியகாந்தனுக்கு 26 மாத சிறைத்தண்டனை!
01:15
Video thumbnail
FIFA உலகக்கோப்பை டிக்கெட் விற்பனை - மணிநேரக் காத்திருப்பால் ரசிகர்கள் கடும் அதிருப்தி!
01:14
Video thumbnail
ஹாமில்டனில் பரபரப்பு: கைவிலங்குடன் பொலிஸ் பிடியிலிருந்து தப்பியோடிய இளைஞர்!
00:50
Video thumbnail
ஆன்லைன் பயங்கரவாத வலையில் சிக்கிய சிறுமி! - '764' குழுமம் குறித்து தந்தை பகீர் எச்சரிக்கை!
01:26
Video thumbnail
விமான எரிபொருள் தட்டுப்பாடு - கனடியர்களின் கோடைகால பயணங்களில் திடீர் மாற்றம்!
01:07
Video thumbnail
றொரண்டோவில் இந்தியர்கள் இருவரைச் சுட்டுக் கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை!
01:07
Video thumbnail
றொரண்டோ வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு - பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகாயம்!
01:01

Related Articles

Latest Articles