மெக்சிகோ பிரமிட் பகுதியில் துப்பாக்கிச் சூடு – கனடியப் பெண் உயிரிழப்பு – சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி!

மெக்சிகோவில் (Mexico) உள்ள உலகப் புகழ்பெற்ற தியோதிஹுவாகன் (Teotihuacán) தொல்பொருள் ஆய்வு மையத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கனடியப் பெண் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

தியோதிஹுவாகன் (Teotihuacán) பகுதியில் உள்ள ‘நிலா பிரமிட்’ (Pyramid of the Moon) அருகே நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இதில் ஒரு கனடியப் பெண் உயிரிழந்ததுடன், மற்றொரு கனடியர் காயமடைந்துள்ளதாக கனடிய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக மெக்சிகோ பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்திற்கு மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் (Claudia Sheinbaum) தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த வெளிநாட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க தூதரகங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாக மெக்சிகோ வெளியுறவுத் துறை கூறியுள்ளது.

இந்தக் கோடையில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்காக மில்லியன் கணக்கான பார்வையாளர்களை வரவேற்க மெக்சிகோ தயாராகி வரும் வேளையில், இந்தத் துப்பாக்கிச் சூடு அந்நாட்டின் பொதுப் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளது.

 

Video thumbnail
கனடாவில் அதிகரித்து வரும் பலதுணை உறவுகள் – சட்ட ரீதியில் சிக்கல்!
01:17
Video thumbnail
றொரண்டோவிற்கு விசேட வானிலை எச்சரிக்கை - இடியுடன் கூடிய மழையைத் தொடர்ந்து கடும் குளிர்!
01:09
Video thumbnail
ஸ்மார்ட் கண்ணாடி மூலம் நூதன மோசடி – றொரண்டோவில் பாரிய சில்லறை வர்த்தக மோசடி கும்பல் கைது!
01:00
Video thumbnail
வான்கூவர் ஸ்கைட்ரெயினில் புதிய மார்க் V ரயில்கள் - பயணிகளுக்கு கூடுதல் வசதி!
01:07
Video thumbnail
சர்ச்சில் துறைமுக விரிவாக்கம் - பணிகளை முடிக்க மத்திய அரசு கடுமையான நிபந்தனை!
01:20
Video thumbnail
மிசிசாகாவில் பயங்கர தீ விபத்து - தனது தாய் மற்றும் சகோதரரைக் காப்பாற்ற தீக்குள் குதித்த நபர்!
00:55
Video thumbnail
ஸ்கார்பரோ ரயில் நிலையங்களில் வாகனத் திருட்டு - மூவர் கைது!
01:13
Video thumbnail
மளிகைப் பொருள் விலை உயர்வு - 'சர்வைலன்ஸ் பிரைசிங்' தடையை நிராகரித்தார் முதல்வர் டக் போர்ட்!
01:29
Video thumbnail
ஹாமில்டனில் போலி பொலிஸ் அதிகாரி அட்டகாசம்!
01:11
Video thumbnail
கனடா தபால் சேவை மாற்றம் - வீட்டுக்கு வீடு தபால் விநியோகம் விரைவில் நிறுத்தம்!
01:05

Related Articles

Latest Articles