நோவா ஸ்கோடியாவில் பரபரப்பு – போலி துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய இளைஞர் கைது!

நோவா ஸ்கோடியாவின் நியூ கிளாஸ்கோ (New Glasgow) நகரில் உள்ள வணிக நிறுவனம் ஒன்றில், பணியாளர்களை நோக்கி உண்மையான துப்பாக்கி போன்ற ஆயுதத்தைக் காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹாலிபாக்ஸில் (Halifax) இருந்து வடகிழக்கே சுமார் 160 கி.மீ தொலைவில் உள்ள ஜார்ஜ் வீதியில் (George Street) இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அருகிலுள்ள உணவகம் ஒன்றில் வைத்து அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனர்.

அவரிடம் மேற்கொண்ட சோதனையில், அது உண்மையான துப்பாக்கி அல்ல, மாறாக பி.பி. கன் (BB gun) எனப்படும் போலித் துப்பாக்கி என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, அவர் மீது தடைசெய்யப்பட்ட ஆயுதம் வைத்திருந்தமை மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் ஆயுதம் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அவர் எதிர்காலத்தில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05

Related Articles

Latest Articles