றொரண்டோ நிலத்தடி நடைபாதையில் இனவெறித் தாக்குதல் – 37 வயது நபர் கைது!

றொரண்டோ (Toronto) நகரின் புகழ்பெற்ற PATH நிலத்தடி நடைபாதையில், கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற இனவெறித் தூண்டுதலால் அமைந்த தாக்குதல் மற்றும் இந்த வாரம் இடம்பெற்ற மற்றொரு தாக்குதல் தொடர்பாக 37 வயது நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜனவரி 16 அன்று, ஸ்கோடியா பிளாசா (Scotia Plaza) மற்றும் பர்ஸ்ட் கனடியன் பிளேஸ் (First Canadian Place) ஆகிய இடங்களுக்கு இடையிலான நிலத்தடி பாதையில் பயணித்த நபர் ஒருவரை வழிமறித்த சந்தேக நபர், அவர் மீது துப்பியுள்ளார்.

இதனை அந்த நபர் தட்டிக்கேட்டபோது, கருப்பினத்தவர்களுக்கு எதிரான இனவெறிச் சொற்களைப் பயன்படுத்தி (Anti-Black racial slurs), ஆக்ரோஷமான முறையில் அவரைத் தாக்க முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 8 அன்று யங் மற்றும் கிங் வீதி (Yonge and King streets) பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றிலிருந்து வெளியேறுமாறு கோரப்பட்டபோது.

அங்கிருந்த ஒருவரை ஆயுதத்தால் தாக்க முயன்ற சம்பவத்திலும் இவருக்குத் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர் டொராண்டோவைச் சேர்ந்த டேரன் தோமி (Darren Thomey) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் மீது வெறுப்புணர்வுத் தாக்குதல் மற்றும் ஆயுதத்தால் தாக்குதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05

Related Articles

Latest Articles