டொரண்டோவில் திடீர் காலநிலை மாற்றம் – பலத்த காற்றுடன் பனிப்பொழிவு எச்சரிக்கை!

டொராண்டோ (Toronto) நகரம் இந்த வாரத் தொடக்கத்தில் வழக்கத்திற்கு மாறான கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவைச் சந்திக்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இன்று திங்கட்கிழமை பெய்யும் மழை, இரவு வேளையில் ஈரமான பனியாக (Wet snow) மாறக்கூடும் எனவும் எதிர்வுகூறப்படுகிறது.

டொராண்டோவில் 1 செ.மீ வரையிலும், பாரி (Barrie) மற்றும் யோர்க் (York) பிராந்தியத்தின் வடக்குப் பகுதிகளில் 4 செ.மீ வரையிலும் பனி படிய வாய்ப்புள்ளதென கூறப்படுகிறது.

அதன்படி, நாளை செவ்வாய்க்கிழமை இந்த வாரத்தின் மிகக் குளிரான நாளாக அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 30 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் பலத்த வடமேற்கு காற்றினால், உண்மையான வெப்பநிலையை விட உடல் உணரும் குளிர் (Wind chill) -8 முதல் –10 பாகை செல்ஸியஸ் வரை செல்லக்கூடும்.

செவ்வாயன்று அதிகபட்ச வெப்பநிலை 2 பாகை செல்ஸியஸாகவும், குறைந்தபட்சம் –5 பாகை செல்ஸியஸாகவும் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்தத் திடீர் குளிர் நீண்ட காலம் நீடிக்காது. புதன்கிழமை முதல் வானிலை ஓரளவு சீரடையத் தொடங்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை வெப்பநிலை மீண்டும் 17 பாகை செல்ஸியஸ் வரை அதிகரித்து வசந்தகால வெப்பம் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வார இறுதியில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
கனடாவில் சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்கள் மற்றும் ஏ.ஐ (AI) தடை? லிபரல் கட்சி விவாதம்!
01:21
Video thumbnail
கனடாவில் எரிபொருள் விலை குறைப்பு - மத்திய அரசின் எரிபொருள் வரி 5 மாதங்களுக்கு நிறுத்தம்!
01:25
Video thumbnail
ஒன்ராறியோ சிறைச்சாலைகளில் குளறுபடி - ஒவ்வொரு ஆண்டும் பெருமளவான கணக்கான கைதிகள் தவறுதலாக விடுதலை!
01:10
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:15
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:07
Video thumbnail
38,000 கிலோ பிளாஸ்டிக் மறுசுழற்சி – சாதனை செய்தது வான்கூவர்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் கனமழை - வீதிகளில் நீர் தேக்கம், சாரதிகளுக்கு எச்சரிக்கை!
01:12
Video thumbnail
ரெஜினாவில் (Regina) நள்ளிரவில் தீ வைப்பு - பாதுகாப்பு கெமராவில் பதிவான அதிர்ச்சி காட்சி!
01:05
Video thumbnail
பிராம்ப்டனில் கோர விபத்து - எஸ்.யு.வி கார் லொரியின் அடியில் சிக்கி நபர் பலி!
01:02
Video thumbnail
ஒன்ராறியோவில் பல பில்லியன் டொலர் செலவில் சிறை கொள்ளளவை அதிகரிக்க திட்டம்!
01:25

Related Articles

Latest Articles