உயிரியல் பூங்கா வாசலில் கைவிடப்பட்ட ஆமை – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர வேண்டுகோள்!

கனடாவின் வான் (Vaughan) நகரில் உள்ள ரெப்டிலியா (Reptilia) ஊர்வன உயிரியல் பூங்கா மற்றும் கல்வி மையத்திற்கு வெளியே, புளோரிடா ஸ்நாப்பிங் ஆமை (Florida snapping turtle) ஒன்று கைவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை காலை, பூங்கா ஊழியர்கள் வாகன தரிப்பிடத்தில் ஒரு சந்தேகத்திற்கிடமான பெட்டியைக் கண்டெடுத்தனர்.

அதனுள் கில்பர்டோ‘ (Gilberto) என்று பெயரிடப்பட்ட ஒரு ஆமை இருப்பதைக் கவனித்தனர்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த பூங்காவின் ஊடகப்பேச்சாளர் ஆஷ்லே மைகா (Ashley Maika), இத்தகைய விலங்குகளைப் பாதுகாப்பற்ற முறையில் வெளியில் விட்டுச் செல்வது அவற்றின் உயிருக்கு ஆபத்தானது என எச்சரித்துள்ளார்.

மார்ச் மாதத்தில் விட்பி (Whitby) பகுதியில் உள்ள பூங்கா கிளையிலும் மூன்று மலைப்பாம்புகள் இவ்வாறு கைவிடப்பட்டிருந்தன.

இச்சம்பவம் குறித்து மாகாண விலங்கு நலச் சேவையகத்திற்கு (Provincial Animal Welfare Services) தகவல் வழங்கப்பட்டுள்ளது.

புளோரிடா ஸ்நாப்பிங் ஆமைகள் அதிக இடவசதியையும் நீண்டகாலப் பராமரிப்பையும் கோருபவை என்பதால், பலர் இவற்றை வளர்க்க முடியாமல் தவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், விலங்குகளை வெளியில் விட்டுச் செல்லாமல், உரிய மீட்பு அமைப்புகளின் உதவியை நாடுமாறு பூங்கா நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. 

தற்போது இந்த ஆமை தற்காலிகமாகப் பராமரிக்கப்பட்டு வருவதுடன், மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00

Related Articles

Latest Articles