டொராண்டோவில் துப்பாக்கி ஏந்திய பொலிஸார் குவிப்பு – வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சுற்றுலா மையங்களில் பாதுகாப்பு தீவிரம்!

டொராண்டோ (Toronto) நகரில் உள்ள வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் அதிநவீன ரகத் துப்பாக்கிகளை ஏந்திய பொலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக டொராண்டோ பொலிஸ் சேவை (TPS) அறிவித்துள்ளது.

வன்முறைச் செயல்களைத் தடுக்கும் நோக்கில் “டாஸ்க் போர்ஸ் கார்டியன்” (Task Force Guardian) என்ற புதிய பாதுகாப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து டொராண்டோ பொலிஸ் தலைமை அதிகாரி மைரன் டெம்கிவ் (Myron Demkiw) கூறுகையில், “இந்த நடவடிக்கை ஏதேனும் குறிப்பிட்ட அச்சுறுத்தலுக்கானது அல்ல; மாறாக பயங்கரவாதம் மற்றும் வெறுப்புணர்வால் தூண்டப்படும் வன்முறைகளைத் தடுப்பதற்கான ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை” எனத் தெரிவித்தார்.

அண்மையில்  டொராண்டோ ஜெப ஆலயங்கள் மற்றும் அமெரிக்க தூதரகம் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மற்றும் வரவிருக்கும் பிபா உலகக் கோப்பை (FIFA World Cup) ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிகள் மற்றும் நவீன உபகரணங்கள் ஏந்திய பொலிஸாரைக் கண்டு பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் விரைந்து செயல்படுவதற்காகவே அவர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர் என்றும் துணைத் தலைமை அதிகாரி பிராங்க் பாரெடோ (Frank Barredo) விளக்கமளித்துள்ளார்.

Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00

Related Articles

Latest Articles