நிலவுப் பயணம் தயார் – ஆர்ட்டெமிஸ் II ராக்கெட் ஏவுதளத்திற்குப் பயணம் – வரலாறு படைக்கும் கனடிய வீரர்!

கனடிய விண்வெளி வீரர் ஜெர்மி ஹேன்சன் (Jeremy Hansen) உட்பட நால்வரை நிலவுக்கு அழைத்துச் செல்லவுள்ளது.

அதற்கமைவாக ஆர்ட்டெமிஸ் II (Artemis II) ராக்கெட், வெள்ளிக்கிழமை அதிகாலை ஏவுதளத்தை நோக்கி மெதுவாக நகரத் தொடங்கியது.

புளோரிடாவில் (Florida) உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் (Kennedy Space Center) பலத்த காற்று காரணமாகச் சற்று தாமதத்திற்குப் பிறகு இந்தச் செயல்முறை ஆரம்பமானது.

சுமார் 12 மணிநேரம் நீடிக்கும் இந்தப் பயணத்தைத் தொடர்ந்து, ராக்கெட் ஏவுதளத்தை சென்றடையும்.

எரிபொருள் கசிவு மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விண்வெளிப் பயணம் பலமுறை தாமதமாகியிருந்த்து.

எவ்வாறாயினும் தற்போது சாத்தியமாக எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி விண்ணில் ஏவப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஒன்றாரியோவின் லண்டன் (London, Ont.) நகரைச் சேர்ந்த ஜெர்மி ஹேன்சன், இந்தப் பயணத்தின் மூலம் பூமியின் சுற்றுப்பாதையைத் தாண்டி நிலவுக்குச் செல்லும் முதல் அமெரிக்கர் அல்லாத வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார்.

1972 ஆம் ஆண்டு அப்பல்லோ (Apollo) திட்டத்திற்குப் பிறகு நிலவுக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் முதல் விண்கலம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48

Related Articles

Latest Articles