இஸ்ரேல் மற்றும் துபாய் விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியது Air Canada!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் போர் பதற்றம் காரணமாக, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கான (UAE) விமான சேவைகளை Air Canada நிறுவனம் மேலும் சில வாரங்களுக்கு நீட்டித்துள்ளது.

இதன்படி, டொராண்டோவில் (Toronto) இருந்து டெல் அவிவ் (Tel Aviv) நகருக்கான விமானங்கள் மே 2-ஆம் தேதி வரையிலும், துபாய் (Dubai) நகருக்கான விமானங்கள் மார்ச் 28-ஆம் தேதி வரையிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வான்பரப்பு மூடப்பட்டதால் பாதிப்படைந்துள்ள பயணிகளுக்கு மாற்றாக, டெல்லி (Delhi) ஊடாக மேலதிக விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், போர்ப் பகுதியில் சிக்கியுள்ள 180 கனடியர்களை துபாயில் இருந்து இஸ்தான்புல் (Istanbul) அழைத்து வர சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) தெரிவித்துள்ளார்.

ஈரான், இஸ்ரேல் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு கனடிய அரசு தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Related Articles

Latest Articles