ஜப்பானுடன் புதிய பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் கைசாத்திட்டது கனடா!

கனடா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையே பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புதிய மூலோபாய கூட்டாண்மை ஒப்பந்தம் (Strategic Partnership Agreement) கைசாத்திடப்பட்டது.

கனடிய பிரதமர் Mark Carney, தனது 10 நாள் பயணத்தின் இறுதி அங்கமாக Tokyo நகரில் ஜப்பானிய பிரதமர் Sanae Takaichi-யை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன்படி, சைபர் கொள்கை, ஆர்க்டிக் பாதுகாப்பு (Arctic security), காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளுதல், சர்வதேச அவசரக்கால துலங்கல் மற்றும் சட்டவிரோத மீன்பிடித்தலைத் தடுத்தல் போன்ற பல துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படத் தீர்மானித்துள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையே தற்போது காணப்படும் $40 பில்லியன் பெறுமதியான இருதரப்பு வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், ‘Team Canada’ வர்த்தகக் குழு வரும் மாதங்களில் ஜப்பானுக்கு விஜயம் செய்யும் என பிரதமர் Mark Carney அறிவித்துள்ளார்.

திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) மற்றும் முக்கியமான தாதுக்கள் (Critical minerals) ஆகியவற்றின் விநியோகத்தைப் பாதுகாப்பதில் இரு நாடுகளும் நெருங்கிச் செயல்பட ஒப்புக்கொண்டுள்ளன.

Related Articles

Latest Articles