ஈரான் நாட்டின் உச்ச தலைவர் Ayatollah Ali Khamenei, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை ஈரான் அரசு ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன.
தெஹ்ரானில் (Tehran) உள்ள தனது அலுவலகத்தில் இருந்தபோது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 86 வயதான Ayatollah Ali Khamenei கொல்லப்பட்டார்.
இந்தத் தாக்குதலை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து திட்டமிட்டு நடத்தியதாக அதிபர் Donald Trump அறிவித்துள்ளார்.
இது ஈரானிய மக்கள் தங்கள் நாட்டை மீட்டெடுக்கக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலில் Khamenei-யின் மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தை உட்பட சில உறவினர்களும் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.
“கடுமையான மற்றும் வருத்தமளிக்கக்கூடிய தண்டனை” காத்திருப்பதாக ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (Revolutionary Guard) எச்சரித்துள்ளது.










