தனது 9 வயது மகளான Melina Frattolin ஐ நீரில் மூழ்கடித்துக் கொன்ற குற்றம் நிரூபிக்கப்பட்ட மொன்றியலைச் (Montreal) சேர்ந்த Luciano Frattolin என்பவருக்கான தண்டனை விவரங்கள் இன்று நியூயோர்க் (New York) Essex County Court நீதிமன்றத்தில் அறிவிக்கப்படவுள்ளன.
கடந்த ஓகஸ்ட் 10 அன்று நடைபெற்ற விசாரணையில், Luciano Frattolin இரண்டாம் நிலை வழக்கில் கொலைக் குற்றவாளி (Second-degree murder) மற்றும் சடலத்தை மறைத்த குற்றவாளி எனக் கண்டறியப்பட்டார்.
தனது மகள் கடத்தப்பட்டதாக அவர் கூறிய குற்றச்சாட்டை, வாகன இருப்பிடத் தரவு (Car location data), கைபேசித் தரவு (Cellphone data) மற்றும் கண்காணிப்புக் கெமரா பதிவுகள் மூலம் அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் பொய்யென நிரூபித்தனர்.
வழக்கறிஞர் Michael Langey இன் கூற்றுப்படி, இவருக்குக் குறைந்தபட்சம் 15 முதல் 25 ஆண்டுகள் வரை பிணை பெற முடியாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
