36 மணி நேரத்தில் 4 Lithium-ion Battery தீ விபத்துகள்! Toronto Fire கடும் எச்சரிக்கை

உங்கள் வீட்டில் இருக்கும் Lithium-ion Battery-கள் பாதுகாப்பானவையா? Toronto-வில் அடுத்தடுத்து நிகழும் தீ விபத்துகள் புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

சுமார் 36 மணி நேரத்திற்குள் Toronto நகரில் Lithium-ion Battery-களுடன் தொடர்புடைய நான்கு தீ விபத்துகளுக்கு தீயணைப்புப் படையினர் சென்றுள்ளதாக Toronto Fire தெரிவித்துள்ளது.

புதன்கிழமை மாலை North York-இல், Anthony Road பகுதியில் உள்ள வீட்டின் garage-இல் பாரிய தீ ஏற்பட்டது.

அங்கிருந்த ஒரு பையில் வைக்கப்பட்டிருந்த battery-களிலிருந்து தீ ஆரம்பித்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ garage-இலிருந்து வீட்டின் கூரைப் பகுதிக்கும் பரவியது.

அதே நாளில் downtown Toronto-வின் George Street பகுதியில் ஏற்பட்ட மற்றொரு Lithium-ion Battery தீ விபத்தில் மூவர் காயமடைந்தனர்.

இந்த ஆண்டு மட்டும் 76 Lithium-ion Battery சம்பவங்களுக்கு தீயணைப்புப் படை சென்றுள்ளதாகவும், அவற்றில் இரண்டு உயிரிழப்புகளும் 14 காயங்களும் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Lithium-ion Battery-கள் தீப்பிடிக்கும்போது ஏற்படும் “thermal runaway” எனப்படும் இரசாயன தொடர் எதிர்வினையால் தீ மிக வேகமாகப் பரவக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

சில சந்தர்ப்பங்களில் வெறும் 90 நொடிகளுக்குள் ஒரு அறை முழுவதும் தீப்பற்றக்கூடிய நிலை ஏற்படலாம் என்றும் அவர் கூறுகிறார்.

குறிப்பாக தரச்சான்று பெறாத அல்லது ஒழுங்குமுறைப்படுத்தப்படாத e-bike மற்றும் பிற micromobility சாதனங்களின் battery-கள் முக்கிய அபாயமாக இருப்பதாக Toronto Fire எச்சரித்துள்ளது.

Related Articles

Latest Articles