30 நிமிடங்களில் 32 வாகனங்கள் உடைப்பு – Mississaugaவில் சந்தேகநபருக்கு வலைவீச்சு!

Mississaugaவில் வெறும் 30 நிமிடங்களுக்குள் 32 வாகனங்கள் உடைக்கப்பட்டு, அவற்றிலிருந்த பெறுமதியான பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக Peel Regional Police சந்தேகநபர் ஒருவரை தேடி வருகின்றனர்.

செப்டம்பர் 3ஆம் திகதி அதிகாலை 3 முதல் 3.30 வரையான நேரத்தில் Alpha Mills Road, Falconer Drive, Plainsman Road பகுதிகளில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

சில வாகனங்களின் யன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே நுழைந்த சந்தேகநபர், வாகனங்களுக்குள் இருந்த பெறுமதியான பொருட்களை எடுத்துச் சென்றதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

பூட்டப்படாமல் நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களும் குறிவைக்கப்பட்டுள்ளன.

மொத்தமாக 32 வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், எந்த வாகனமும் திருடப்படவில்லை.

போலீசார் வெளியிட்ட தகவலின்படி, தேடப்படும் சந்தேகநபர் சுமார் 30 வயதுடைய வெள்ளையின ஆண் என்றும், நடுத்தர உடல்வாகு கொண்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நபரை அடையாளம் காண உதவக்கூடிய தகவல் அல்லது சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகள் வைத்திருப்பவர்கள் Peel Regional Police-ஐ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles