2026 ஆம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசுக்கு (Nobel Peace Prize) கனடாப் பிரதமர் Mark Carney பரிந்துரைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு சர்வதேச ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
அமெரிக்க அதிபர் Donald Trump உடன் நிலவும் அரசியல் சூழலில், சர்வதேச ஒத்துழைப்பை வலியுறுத்தி வரும் Mark Carney-க்கு இந்த விருது கிடைத்தால், கனடா – அமெரிக்க உறவில் மேலும் விரிசல் ஏற்படக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
எனினும், அக்டோபர் 9 அன்று Oslo-வில் அறிவிக்கப்படவுள்ள இந்த விருதுக்கான பந்தயத்தில் International Space Station, Save Ukraine மற்றும் மனிதநேய அமைப்புகளும் முன்னணியில் உள்ளன.
இதேவேளை, மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு Ozempic போன்ற உடல்நல மருந்துகளுக்கான GLP-1 ஹார்மோனைக் கண்டுபிடித்த கனடிய ஆராய்ச்சியாளர் Dr. Daniel Drucker-ன் பெயர் பரிசீலிக்கப்படுகிறது.
மேலும், இலக்கியத்திற்கான நோபல் பரிசுப் போட்டியில் பிரபல கனடிய எழுத்தாளர்களான Anne Carson மற்றும் Margaret Atwood ஆகியோரின் பெயர்களும் முன்னணியில் உள்ளதாகக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
