16 வயது ஊழியர் மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு – Whitby Pharmacy Manager கைது

Whitby-யில் pharmacy ஒன்றில் பணியாற்றிய 16 வயது சிறுவன் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் Sampath Perera எனும் manager ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Durham Regional Police தகவலின்படி, கடந்த ஆகஸ்ட் 11ஆம் திகதி இந்த சம்பவம் தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

Taunton Road East மற்றும் Garden Street பகுதிக்கு அருகிலுள்ள pharmacy ஒன்றில் பணியாற்றிய 16 வயது சிறுவன், பணியிடத்தில் manager-ஆல் பல தடவைகள் தகாத முறையில் தொடப்பட்டதாக பொலிஸாரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்த Special Victims Unit உள்ளிட்ட பொலிஸார் செப்டம்பர் 16ஆம் திகதி சந்தேக நபரை கைது செய்தனர். 

Markham-ஐச் சேர்ந்த 62 வயதான Sampath Perera என்பவர் மீது sexual assault மற்றும் sexual exploitation ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கக்கூடும் என்ற கவலையும் Durham Regional Police வெளியிட்டுள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles