ஹாமில்டனில் போலி பொலிஸ் அதிகாரி அட்டகாசம் – இருவரிடமிருந்து பணம் மற்றும் உடைமைகளைத் திருடிய நபர் கைது!

ஹாமில்டனில் பொலிஸ் அதிகாரி எனப் போலியாக நடித்து, பொதுமக்களை மிரட்டி அவர்களது உடைமைகளைத் திருடிய 25 வயதுடைய ஆண்ட்ரூ வைட் (Andrew White) என்பவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திங்கட்கிழமை காலை 8 மணியளவில் கேனான் ஸ்டீரிட் ஈஸ்ட் (Cannon Street East) மற்றும் வெலிங்டன் ஸ்டீரிட் நார்த் (Wellington Street North) பகுதியில், தான் ஒரு ரகசிய பொலிஸ் அதிகாரி என்று கூறி, அடையாளத்திற்காக வாலட்டைப் பெறுவது போலச் செய்து அதைத் திருடிச் சென்றுள்ளார்.

காலை 9:30 மணியளவில் கிங் (King) மற்றும் ஆஷ்லி ஸ்டீரிட் (Ashley streets) அருகில், சைக்கிள் திருட்டு தொடர்பான விசாரணையில் ஈடுபடுவதாகக் கூறி, பாதிக்கப்பட்ட நபரைச் சோதனையிட்டு அவரது அலைபேசி மற்றும் டெபிட் கார்டைத் திருடிச் சென்றுள்ளார்.

முறையான பொலிஸ் அதிகாரிகள் தங்களை உரிய சீருடை அல்லது அடையாள அட்டையுடன் மட்டுமே வெளிப்படுத்துவார்கள்.

எந்தவொரு சந்தேகத்திற்கிடமான சூழலிலும், பொதுமக்கள் தங்களை அணுகும் அதிகாரிகளிடம் உரிய அடையாள அட்டையைக் கோருவதற்கு முழு உரிமை உண்டு என்று ஹாமில்டன் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆண்ட்ரூ வைட் மீது ஆள்மாறாட்டம், திருட்டு மற்றும் கிரெடிட் கார்டை அனுமதியின்றி பயன்படுத்தியது போன்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளன

Video thumbnail
எல்லை வழியாக சட்டவிரோதமாக நுழைந்த அமெரிக்க நபர் தற்கொலை!
01:15
Video thumbnail
ஒன்ராறியோவில் உயர்கல்வி புரட்சி - 6.4 பில்லியன் டொலர் வரலாற்றுச் சிறப்புமிக்க நிதி ஒதுக்கீடு!
01:34
Video thumbnail
றொரண்டோ TTC பேருந்தில் தாக்குதல் - சந்தேக நபரைத் தேடும் பொலிஸார்!
00:38
Video thumbnail
றொரண்டோவின் புதிய EDGE ஊக்கத் திட்டம் - முதல் பயனாளியாக நோர்த் யோர்க் நிறுவனம் தெரிவு!
01:09
Video thumbnail
கனடாவில் சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்கள் மற்றும் ஏ.ஐ (AI) தடை? லிபரல் கட்சி விவாதம்!
01:21
Video thumbnail
கனடாவில் எரிபொருள் விலை குறைப்பு - மத்திய அரசின் எரிபொருள் வரி 5 மாதங்களுக்கு நிறுத்தம்!
01:25
Video thumbnail
ஒன்ராறியோ சிறைச்சாலைகளில் குளறுபடி - ஒவ்வொரு ஆண்டும் பெருமளவான கணக்கான கைதிகள் தவறுதலாக விடுதலை!
01:10
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:15
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:07
Video thumbnail
38,000 கிலோ பிளாஸ்டிக் மறுசுழற்சி – சாதனை செய்தது வான்கூவர்!
01:10

Related Articles

Latest Articles