ஸ்கார்பரோவில் மீண்டும் தீவைப்பு – ஒரே வாரத்தில் FlooReno நிறுவனத்தின் மூன்று கிடங்குகள் எரிப்பு!

றொரண்டேவின் ஸ்கார்பரோ (Scarborough) பகுதியில் உள்ள FlooReno கட்டிட விநியோக நிறுவனத்தின் கிடங்கு ஒன்றில் புதன்கிழமை அதிகாலை மர்ம நபர் ஒருவரால் தீ வைக்கப்பட்டுள்ளது.

லோரன்ஸ் அவென்யூ ஈஸ்ட் (Lawrence Avenue East) மற்றும் கென்னடி வீதி (Kennedy Road) சந்திப்புக்கு அருகில் உள்ள கிடங்கிற்கு நள்ளிரவு 2 மணியளவில் மர்ம நபர் ஒருவர் SUV வாகனத்தில் வந்துள்ளார்.

அவர் ஜன்னலை உடைத்து, எரிபொருளை ஊற்றி தீ வைக்கும் காட்சிகள் பாதுகாப்பு கமெராவில் பதிவாகியுள்ளன.

இது அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான கிடங்குகள் மீது நடத்தப்படும் மூன்றாவது தாக்குதலாகும்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மிசிசாகா (Mississauga) மற்றும் நோர்பின்ச் டிரைவ் (Norfinch Drive) பகுதிகளில் உள்ள மற்றுமொரு கிடங்கிலும் தீவைப்பு சம்பவங்கள் இடம்பெற்றன.

இந்த மூன்று தீ விபத்துகளால் சுமார் 5 மில்லியன் டொலர்கள் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் அபாத் ஹமாம் (Abad Hamam) தெரிவித்துள்ளார்.

அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவங்களில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

எனினும், இது தமது ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளதாக நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது.

றொரண்டோ மற்றும் பீல் பிராந்திய பொலிஸார் இணைந்து இந்தச் சம்பவங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்ட தீவைப்புகளா (Arson) என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமது நிறுவனம் நான்கு தசாப்தங்களாகக் கட்டியெழுப்பப்பட்ட ஒன்று என்றும், இத்தாக்குதல்கள் தங்களை முடக்க முடியாது என்றும் FlooReno நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான தகவல்கள் தெரிந்தால் பொலிஸாருக்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

Video thumbnail
வீட்டை நேரில் பார்த்தும் Rental Scam-ல் சிக்க முடியுமா? — ஆம்!
01:11
Video thumbnail
2020-ல் உங்கள் CRA account hack செய்யப்பட்டதா? உங்களுக்கு $5,000 வரை கிடைக்க வாய்ப்பு இருக்கலாம்!
01:07
Video thumbnail
ஒரு Seatbelt காரணமாக முழு விமானமும் ரத்தாகுமா? — Victoria-வில் அதுதான் நடந்துள்ளது!
01:00
Video thumbnail
றொரொண்டோவில் மட்டுமல்ல—கல்கரியிலும் ரக்கூன்களின் நடமாட்டம் அதிகரிக்கிறதா?
01:11
Video thumbnail
நள்ளிரவு பொலிஸ் நடவடிக்கை… சில நிமிடங்களில் 19 வயது இளைஞர் உயிரிழப்பு!
01:33
Video thumbnail
Facebook, Instagram சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதா?
01:33
Video thumbnail
Weekend Plan இருக்கிறதா? வெளியே புறப்படுவதற்கு முன் Scarborough வானிலையை பாருங்கள்!
01:01
Video thumbnail
Toronto Zoo-வுக்கு வந்துள்ள புதிய குட்டி விருந்தினர்!
00:43
Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45

Related Articles

Latest Articles