டொராண்டோவில் ஸ்காபரோவில் உள்ள ஒரு மோட்டலில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு பெண் ஒருவர் மீது கத்திக் குத்துச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் கிங்ஸ்டன் ரோட் அன்ட் பென்வுட் ஹைட்ஸ் பகுதியிலுள்ள ஒரு மோட்டலில் இரவு 11 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், காயமடைந்த 30-வயது பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
குறித்த பெண் பலத்த காயமடைந்துள்ளதாகவும் எனினும் உயிருக்கு ஆபத்து இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான சந்தேகநபரின் விபரங்களை பொலிசார் இதுவரை வெளியிடவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணைகள் நடந்து வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.