வாழத் தகுதியான நகரங்கள் 2026 – கனடாவின் வான்கூவர் ஒன்பதாம் இடம்!

எகனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் (Economist Intelligence Unit – EIU) அமைப்பு செவ்வாய்க்கிழமை 2026 ஆம் ஆண்டுக்கான உலகின் மிகச் சிறந்த வாழத் தகுதியான நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

டென்மார்க் நாட்டின் தலைநகரான கோபன்ஹேகன் (Copenhagen) தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.

கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் கலாச்சாரம் ஆகிய காரணிகளின் அடிப்படையில் உலகின் 173 நகரங்களை ஆய்வு செய்து இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் ஸ்திரத்தன்மை, உள்கட்டமைப்பு மற்றும் கல்வி ஆகிய மூன்று பிரிவுகளில் கோபன்ஹேகன் முழுமையான புள்ளிகளைப் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டுகளில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரியாவின் வியன்னா (Vienna) நகரம் இம்முறை இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.

இப்பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் (Melbourne) மற்றும் சிட்னி (Sydney) ஆகிய நகரங்கள் முறையே மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடித்துள்ளன.

சுவிட்சர்லாந்தின் சூரிச் (Zurich) ஐந்தாம் இடத்திலும், ஜெனீவா (Geneva) ஆறாம் இடத்திலும் உள்ளன.

ஜப்பானின் ஒசாகா (Osaka) ஏழாம் இடத்தையும், ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் (Adelaide) எட்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.

கனடாவின் வான்கூவர் (Vancouver) நகரம் ஒன்பதாம் இடத்தைப் பிடித்து, வட அமெரிக்க பிராந்தியத்தில் முதல் 10 இடங்களுக்குள் வந்த ஒரே நகரமாகத் திகழ்கிறது. ஜப்பானின் டோக்கியோ (Tokyo) பத்தாம் இடத்தில் உள்ளது.

ஈரான் போரின் தாக்கம் காரணமாக மத்திய கிழக்கு பிராந்திய நகரங்களின் புள்ளிகள் குறைந்துள்ளன.

ஓமானின் மஸ்கட் (Muscat) 14 இடங்கள் சரிந்து 123 ஆவது இடத்திற்கும், குவைத் நாட்டின் குவைத் சிட்டி (Kuwait City) 105 ஆவது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளன.

சிரியாவின் டமாஸ்கஸ் (Damascus) நகரம் உலகின் மிகக் குறைந்த வாழத் தகுதியான நகரமாகத் தொடர்ந்து கடைசி இடத்தில் உள்ளது.

Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03
Video thumbnail
WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!
01:19
Video thumbnail
மழை வெள்ளத்தில் மூழ்கிய Niagara - St. Catharines, Lincoln நகரங்களில் அவசரநிலை!
00:57
Video thumbnail
'Toronto Islands' போலி Ferry Tickets விற்கும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை!
01:24

Related Articles

Latest Articles