வடக்கு ஒன்றாரியோ காட்டுத்தீ : தண்டர் பே பகுதிக்கு முதல்வர் டக் போர்ட் அவசர விஜயம்!

வடக்கு ஒன்றாரியோ  Northern Ontario பகுதியில் காட்டுத்தீ தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில்,  அவசர கால நடவடிக்கைகளுக்காகப் புகலிடம் தேடி இடம்பெயர்ந்துள்ள மக்களை நேரில் சந்திப்பதற்காக Premier Doug Ford, Thunder Bay நகருக்குச் செல்லவுள்ளார்.

அவருடன் Natural Resources Minister Mike Harris-உம் இந்த விஜயத்தில் இணையவுள்ளார். மாகாண அரசின் அவசர கால மீட்பு நடவடிக்கைகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்துக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள பின்னணியில் இந்த விஜயம் அமைகிறது.

தற்போது மாகாணத்தில் சுமார் 200 காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

Whitesand First Nation மற்றும் Collins First Nation (Namaygoosisagagun First Nation) ஆகிய பூர்வீகக் குடிகளின் கிராமங்களைச் சேர்ந்த மக்கள், மாகாண அரசின் உதவிகள் இன்றி படகுகள் மூலம் தப்பித்து வந்து தற்போது Thunder Bay விடுதிகளில் தங்கியுள்ளனர்.

தீ வேகமாகப் பரவியதால், அது கிராமத்தின் எல்லைக்கு வரும் வரை கண்டறிய முடியாமல் போனதாக Minister Mike Harris விளக்கமளித்துள்ளார்.

150 தீயணைப்புக் குழுக்களும், 80க்கும் மேற்பட்ட நீர் ஊற்றி அழிக்கும் விமானங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், மக்களின் பாதுகாப்பிற்கு எவ்வித சமரசமும் செய்யப்படாது என்றும் Doug Ford தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles