றொரண்டோ ரயில் நிலையம் அருகே தாக்குதல்: கைது செய்யப்பட்ட இளைஞர் மீது கொலை முயற்சி வழக்கு!

கனடாவின் றொரண்டோ (Toronto) நகரில் உள்ள ரோஸ்டேல்Subway நிலையத்திற்கு (Rosedale Station) அருகில் இருவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய 21 வயது இளைஞரை பொலிஸார் கைது செய்து, அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை அதிகாலை 2:45 மணியளவில், ரோஸ்டேல் நிலையத்திற்குள் நுழைந்த குறித்த நபர், அங்கு வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு கருவியைத் திருடிக் கொண்டு வெளியே வந்து அருகில் இருந்த இருவரை நோக்கிச் சென்றுள்ளார்.

அவரிடமிருந்து தப்பிக்க இருவரும் ஓட முயன்றபோது, ஒருவர் கீழே விழுந்து தாக்குதலுக்கு இலக்கானார். அவரைக் காப்பாற்ற முயன்ற இரண்டாவது நபரும் கடுமையாகத் தாக்கப்பட்டார்.

படுகாயமடைந்த இருவரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய லோகன் கச்சென் (Logan Cachene) என்ற 21 வயது இளைஞரை, வெள்ளிக்கிழமை பாதர்ஸ்ட் வீதி (Bathurst Street) மற்றும் எக்ளிண்டன் அவென்யூ (Eglinton Avenue) பகுதிக்கு அருகில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் மீது கொலை முயற்சி, தாக்குதல், $5,000 டொலருக்கு உட்பட்ட திருட்டு மற்றும் பிணை நிபந்தனைகளை மீறியமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Video thumbnail
Mississauga அடுக்குமாடிக் கட்டிடத்தில் சந்தேகத்திற்கிடமான தீ – 11 பேர் மருத்துவமனையில்!
01:01
Video thumbnail
Pickering அணு உலைகள் 10 ஆண்டுகளுக்கு நிறுத்தம்! $26.8 பில்லியன் திட்டம்!
01:43
Video thumbnail
Scarborough வாகனத் தரிப்பிடத்தில் வீடற்றவர்களுக்கு புதிய குடியிருப்பு!
01:55
Video thumbnail
Alberta பிரிவினை: Calgary சபையிலும் பிளவு!
01:20
Video thumbnail
Alberta பிரிவினை: வாக்கெடுப்புக்குப் பின்னும் தொடரும் பிரிவினை விவாதம்!
01:06
Video thumbnail
100 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய காட்டுப்பூனை இனம் கண்டுபிடிப்பு!
01:25
Video thumbnail
ஒன்ராறியோவில் சூதாட்டப் பாதிப்பு - அவசர சிகிச்சைக்கு வருவோர் இரட்டிப்பு!
01:23
Video thumbnail
GO ரயிலில் மது அருந்தி தொந்தரவு! 3 சிறுமிகள் மீது குற்றச்சாட்டு!
01:16
Video thumbnail
மழை குறைகிறது! Toronto Weekend Weather
01:10
Video thumbnail
Greenland-இல் அமெரிக்காவுக்கு நிரந்தர அதிகாரம்?
01:49

Related Articles

Latest Articles