றொரண்டோ சுரங்கப்பாதை ரயில் சேவை பாதிப்பு – பயணிகள் சிரமம்!

றொரண்டோ (Toronto) நகரின் முக்கிய போக்குவரத்துச் சேவையான சுரங்கப்பாதை ரயில் சேவையில் (Subway Service) இன்று காலை மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு (Mechanical problem) காரணமாக, Line 2 பாதையின் ஒரு பகுதியில் சுரங்கப்பாதை ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

வுட்பைன் (Woodbine) மற்றும் பிராட்வியூ (Broadview) நிலையங்களுக்கு இடையே ரயில்கள் தற்போது இயங்கவில்லை என TTC அறிவித்துள்ளது.

இன்று காலை 7 மணிக்குப் பின்னரே இந்தப் பிரச்சினை குறித்து முதன்முதலில் அறிவிக்கப்பட்டது.

பயணிகளின் வசதிக்காக இந்தப் பாதைகளில் தற்போது ஷட்டில் பஸ்கள் (Shuttle buses) இயக்கப்பட்டு வருகின்றன.

நேற்றைய தினம் மென்பொருள் கோளாறு (Software issue) காரணமாக Line 2 மற்றும் Line 4 ஆகிய பாதைகளில் முழுமையான சேவை பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இன்று மீண்டும் இந்தத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவசரமாகப் பயணிக்கும் பயணிகள் மாற்று வழித்தடங்களைப் பயன்படுத்துமாறு அல்லது மேலதிக நேரத்தை ஒதுக்கிப் பயணத்தைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related Articles

Latest Articles