றொரண்டோவில் மக்கள் தொகை அதிகரிப்பு , அரச பாடசாலை மாணவர் எண்ணிக்கையில் குறைவு!

Greater Toronto Area (GTA) பகுதியில் ஒட்டுமொத்த மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையிலும், பல பொதுப் பள்ளி வாரியங்களில் (School Boards) மாணவர்களின் சேர்க்கை வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனால் கற்பித்தல், நிர்வாகப் பணியிடங்கள் குறைக்கப்பட்டு, கல்வித் திட்டங்களும் முடக்கப்பட்டு வருகின்றன.

இதற்குப் பின்வரும் முக்கிய காரணங்களை பாடசாலை அதிகாரிகள் மற்றும் கல்வி வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Toronto District School Board (TDSB) தகவல்படி, பிறப்பு விகிதங்கள் குறைந்துள்ளமை, மத்திய அரசின் குடியேற்ற இலக்குகள் (Immigration Targets) குறைக்கப்பட்டதால் புதியவர்கள் வருகை வீழ்ச்சியடைந்துள்ளமை முக்கிய காரணங்களாகும்.

GTA (Mississauga, Brampton, Caledon) பகுதிகளில் நிலவும் அதிக வீட்டு வாடகை மற்றும் விலைகள் காரணமாக இளம் குடும்பங்கள் மாகாணத்தின் பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து செல்கின்றன (Migration). Halton மற்றும் Durham பகுதிகளிலும் இந்த நிலை அவதானிக்கப்பட்டுள்ளது.

COVID-19 பெருந்தொற்றுக்குப் பிறகு Montessori, Waldorf, இஸ்லாமியப் பாடசாலைகள் மற்றும் சுயாதீன கத்தோலிக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Cardus அமைப்பின் Joanna VanHof கூற்றுப்படி, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 322 புதிய சுயாதீனப் பள்ளிகள் Ontario மாகாணத்தில் திறக்கப்பட்டுள்ளன.

பெருந்தொற்றுக்குப் பிறகு வீட்டுக் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.

Homeschool Legal Defence Association of Canada (HLDAC) இன் தலைவர் Peter Stock-இன் கணிப்புப்படி, Ontario-இல் தற்போது சுமார் 90,000 முதல் 110,000 குழந்தைகள் வீட்டுக் கல்வி மூலம் பயில்கின்றனர்.

பொதுக் கல்வி முறையில் தங்களது பிள்ளைகளின் தேவைகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாததே, பெற்றோர் இத்தகைய மாற்று வழிகளை நாடக் காரணம் என வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

Related Articles

Latest Articles