றொரண்டோவில் பூச்சிகளின் படையெடுப்பு – மேகக்கூட்டம் போலச் சுற்றும் ‘மிட்ஜஸ்’!

றொரண்டோவில் தற்போது வசந்த காலம் தொடங்கியுள்ள நிலையில், நீர்நிலைகளுக்கு அருகில் மிட்ஜஸ் (Midges) எனப்படும் சிறிய இறக்கையுள்ள பூச்சிகள் மேகக்கூட்டங்களைப் போலப் பெருமளவில் காணப்படுகின்றன.

கனடாவில் மட்டும் சுமார் 800 வகையான மிட்ஜஸ் பூச்சிகள் காணப்படுகின்றன.

இவை ஏரி அல்லது ஆறுகளின் அடிப்பகுதியில் முட்டையிட்டு, அங்கிருக்கும் கரிமப் பொருட்களை உண்டு வளர்கின்றன.

இவை மீன்கள், தவளைகள் மற்றும் நீர்வாழ் பறவைகளுக்கு மிக முக்கியமான உணவாக இருப்பதால், இயற்கையின் உணவுச் சங்கிலியில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.

முதிர்ச்சியடைந்த பின் இவை நீரிலிருந்து வெளியேறி அதிகபட்சம் ஒரு வாரம் மட்டுமே உயிர்வாழும்.

நாம் பார்க்கும் பூச்சிக் கூட்டங்கள் பெரும்பாலும் பெண் பூச்சிகளுக்காகக் காத்திருக்கும் ஆண் பூச்சிகளாகும்.

இவை பார்ப்பதற்கு எரிச்சலைத் தந்தாலும், மனிதர்களைக் கடிக்காது என்பதால் முற்றிலும் ஆபத்தற்றவை என ராயல் ஒன்ராறியோ அருங்காட்சியகத்தின் (Royal Ontario Museum – ROM) பூச்சியியல் நிபுணர் அந்தோனியா கைடோட்டி (Antonia Guidotti) தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் இறுதி முதல் மே தொடக்கம் வரை இந்தப் பூச்சிகளின் வருகை அதிகமாக இருக்கும்.

இவற்றைத் தவிர்க்க வீட்டின் வெளிச்ச விளக்குகளை அணைத்து வைப்பதும், முகக்கவசம் அல்லது ஸ்கார்ப் (Scarf) அணிந்துகொள்வதும் சிறந்தது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Video thumbnail
றொரொண்டோவில் மட்டுமல்ல—கல்கரியிலும் ரக்கூன்களின் நடமாட்டம் அதிகரிக்கிறதா?
01:11
Video thumbnail
நள்ளிரவு பொலிஸ் நடவடிக்கை… சில நிமிடங்களில் 19 வயது இளைஞர் உயிரிழப்பு!
01:33
Video thumbnail
Facebook, Instagram சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதா?
01:33
Video thumbnail
Weekend Plan இருக்கிறதா? வெளியே புறப்படுவதற்கு முன் Scarborough வானிலையை பாருங்கள்!
01:01
Video thumbnail
Toronto Zoo-வுக்கு வந்துள்ள புதிய குட்டி விருந்தினர்!
00:43
Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10

Related Articles

Latest Articles