றொரண்டோவில் துணிகரம் – 5 இலட்சம் டொலர் பெறுமதியான நகைகள் கொள்ளை – 4 பேருக்கு பொலிஸ் வலைவீச்சு!

றொரண்டோவின் சிட்டிபிளேஸ் (CityPlace) பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருந்தவர்களிடம் துப்பாக்கி முனையில் 5 இலட்சம் டொலர் பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மே 10 ஆம் திகதி அதிகாலை 4:50 மணியளவில் ஸ்படைனா அவென்யூ (Spadina Avenue) மற்றும் ப்ரெம்னர் பொலிவார்ட் (Bremner Boulevard) சந்திப்பிற்கு அருகில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

முகமூடி அணிந்த நான்கு நபர்கள், வாகனத்தில் அமர்ந்திருந்தவர்களைத் துப்பாக்கி முனையில் மிரட்டி, அவர்களிடம் இருந்த 500,000 டொலர்களுக்கும் அதிக மதிப்புள்ள நகைகளைப் பறித்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

கொள்ளையர்கள் வேறொரு வாகனத்தில் தப்பியோடியுள்ளனர்.

சந்தேக நபர்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய வாகனம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை றொரண்டோ பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்த விபரங்கள் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

நகரின் மையப்பகுதியில் அதிகாலை வேளையில் நடந்த இந்தத் துணிகரக் கொள்ளை குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles