செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் கடந்த ஆறு மாதங்களில் ராக்கெட் வேகத்தில் அதிகரித்துள்ளதாக டொராண்டோ பொலிசார் (Toronto Police Service) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
டொராண்டோ நிதிக்குற்றப் பிரிவின் அதிகாரி டேவிட் காபி (Det. David Coffey), 2025-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து இந்த வகை மோசடிகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பழைய மோசடி முறைகளே தற்போதும் பின்பற்றப்பட்டாலும், AI மூலம் தனிநபர்களின் விபரங்களை மிகத் துல்லியமாகத் திரட்டி, மிகவும் நம்பகமான முறையில் மோசடியாளர்கள் பேசுகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு 370 மில்லியன் டொலராக இருந்த இழப்பு, 2025-இல் 433 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.
காதல் மோசடிகள் (Romance scams), முதலீட்டு மோசடிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் போல் நடித்து ஏமாற்றுவது போன்ற செயல்களில் AI பயன்படுத்தப்படுகிறது.
“அவசரம் மற்றும் பயத்தை” ஆயுதமாகப் பயன்படுத்தும் இத்தகைய அழைப்புகள் வந்தால் கவனமாக இருக்குமாறு பொதுமக்களை பொலிசார் அறிவுறுத்துகின்றனர்.










