மெக்சிகோவிற்கு ஏற்றுமதியாகும் கனடிய உருளைக்கிழங்கு – புதிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!

cbc.ca

கனடாவின் புதிய மற்றும் பதப்படுத்தப்பட்ட உருளைக்கிழங்குகளை மெக்சிகோ சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கு ஏதுவாக இரு நாடுகளுக்கும் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக கனடிய உணவு ஆய்வு முகமை (CFIA) அறிவித்துள்ளது.

கனடிய விவசாயத் துறை அமைச்சர் Heath MacDonald மேற்கொண்ட தொடர்ச்சியான வர்த்தகப் பயணங்களின் பலனாக இந்த ஒப்பந்தம் கிடைத்துள்ளது.

இதன் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் கனடாவிலிருந்து மெக்சிகோவிற்கு உருளைக்கிழங்கு ஏற்றுமதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக Prince Edward Island (P.E.I.) மற்றும் New Brunswick மாகாணங்களில் உள்ள உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.

அமெரிக்கச் சந்தையில் நிலவும் நிச்சயமற்ற தன்மையால், கனடிய உற்பத்தியாளர்கள் தங்கள் சந்தையை விரிவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.

அந்த வகையில், மெக்சிகோவின் பெரும் மக்கள் தொகை மற்றும் அங்குள்ள உருளைக்கிழங்குத் தேவையைப் பூர்த்தி செய்ய கனடாவுக்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பு, நாட்டின் விவசாயப் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleபிளாஸ்மா தானம் செய்த நால்வர் உயிரிழப்பு – கனடாவில் தீவிரமடையும் விசாரணைகள்!
Next articleபோதைப்பொருள் தடுப்பு மையங்களுக்கான நிதியை நிறுத்துகிறது ஒன்ராறியோ அரசு