மிசிசாகாவில் வாகன விபத்து – போதை பொருள் உண்ட குற்றச்சாட்டில் பெண் சாரதி கைது!

மிசிசாகாவின் கிளென் எரின் டிரைவ் (Glen Erin Drive) மற்றும் அக்விடெய்ன் அவென்யூ (Aquitaine Avenue) சந்திப்பில், கடந்த சனிக்கிழமை அதிகாலை 1:40 மணியளவில் இரண்டு வாகனங்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகின.

சிவப்பு நிற போர்டு எக்ஸ்ப்ளோரர் (Ford Explorer) SUV மற்றும் கருப்பு நிற வோக்ஸ்வேகன் (Volkswagen) செடான் ஆகிய வாகனங்கள் மோதிக்கொண்டதில், அதில் பயணித்த நால்வர் காயமடைந்தனர்.

பாதிக்கப்பட்ட நால்வரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களில் இருவர் ஆரம்பத்தில் கவலைக்கிடமான நிலையில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

தற்போது நால்வரின் காயங்களும் உயிருக்கு ஆபத்தற்றவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக, வோக்ஸ்வேகன் வாகனத்தைச் செலுத்திய பெண் சாரதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர் மீது மது அல்லது போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் செலுத்தியமை (Impaired operation) தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

விபத்து நடந்த பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை காலை 8 மணி அளவில் சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டன.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பீல் பிராந்திய பொலிஸார் (Peel Police) மேற்கொண்டு வருகின்றனர்.

Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05

Related Articles

Latest Articles