மிசிசாகாவில் கார்களைத் திருடியர் கைது – இந்தியர் ஒருவரைத் தேடி வலைவீச்சு!

மிசிசாகா (Mississauga) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் நிலத்தடி வாகன நிறுத்துமிடங்களில் தொடர்ச்சியாக கார்களைத் திருடி வந்த கும்பலைச் சேர்ந்த 21 வயதுடைய பிரின்ஸ் (Prince) என்ற இளைஞரை பீல் பிராந்திய பொலிஸார் (Peel Police) கைது செய்துள்ளனர்.

அத்துடன், இந்த திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குர்ஜித் சிங் விர்க் (Gurjeet Singh Virk – 23) என்ற மற்றுமொரு இளைஞரை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கடந்த மே மாதம் முதல் ஹுரொன்டாரியோ வீதி (Hurontario Street) மற்றும் பர்னம்தோர்ப் வீதி கிழக்கு (Burnamthorpe Road East) ஆகிய பகுதிகளில் வாகனத் திருட்டுகள் அதிகரித்து காணப்பட்டன.

இந்நிலையில், பொலிஸார் தீவிர கண்காணிப்பு கேமரா மற்றும் நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் இந்த இரு சந்தேகநபர்களையும் அடையாளம் கண்டனர்.

இதனைத் தொடர்ந்து, மிசிசாகா (Mississauga) மற்றும் எரின் (Erin) பகுதிகளில் உள்ள இவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், திருடப்பட்ட வாகன ஆவணங்கள், பல கைத்தொலைபேசிகள், கார் சாவிகள் (Key fobs), சாவிகளை புரோகிராம் செய்யும் கருவிகள் மற்றும் 1,465 டொலர் பணம் என்பன பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்டுள்ள பிரின்ஸ் மீது வாகனத் திருட்டு மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, பிராம்ப்டன் (Brampton) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த வாகனத் திருட்டு கும்பல் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03
Video thumbnail
WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!
01:19
Video thumbnail
மழை வெள்ளத்தில் மூழ்கிய Niagara - St. Catharines, Lincoln நகரங்களில் அவசரநிலை!
00:57
Video thumbnail
'Toronto Islands' போலி Ferry Tickets விற்கும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை!
01:24

Related Articles

Latest Articles