மத்திய கிழக்கிலிருந்து வெளியேறுமாறு கனடியர்களுக்கு அறிவுறுத்தல் – போர் உக்கிரமடையும் என எதிர்வுகூறல்!

மத்திய கிழக்கில் போர் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள கனடியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறும், பயணங்களைத் தவிர்க்குமாறும் இரு நாடுகளும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

அமெரிக்கா (U.S.) மற்றும் இஸ்ரேல் (Israel) இணைந்து ஈரான் (Iran) மீது நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் அதியுயர் தலைவர் கொல்லப்பட்டார்.

இந்தத் தாக்குதலில் இதுவரை 555 ஈரானியர்களும், லெபனானில் (Lebanon) 52 பேரும், இஸ்ரேலில் 11 பேரும் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ​ஈரானிய கடற்படையின் 11 போர்க்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

மறுமுனையில்  இதற்குப் பதிலடியாக, ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல்கள் எரிக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளதால் சர்வதேச கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது.

இதனிடையே ஐக்கிய அரபு அமீரகம் (U.A.E.) உட்பட மத்திய கிழக்குப் பகுதிகளில் சுமார் 85,000 கனடியர்கள் வசித்து வருகின்றனர்.

தற்போதைக்கு மீட்புப் பணிகள் தொடங்கப்படவில்லை என்றாலும், நிலைமை மிக வேகமாக மோசமடைந்து வருவதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

Related Articles

Latest Articles