கனடாவின் Brampton Sports Park இல் நடைபெற்ற Jambana One World Festival 2026 கலைவிழா, மக்கள் கூட்டம் அதிகரித்ததாலும், பாதுகாப்பு கவலைகள் காரணமாகவும் திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே நிறைவுசெய்யப்பட்டது.
Emancipation Day கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இந்நிகழ்வு இரவு 8:30 மணிக்கு நிறைவடையவிருந்த நிலையில், Peel Regional Police (PRP) பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பொதுமக்களை அப் பகுதியைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டது.
விழாவில் அளவுக்கு அதிகமான கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும், இளைஞர்கள் சிலரிடையே மோதல்கள் உருவாகி மக்களை மிதிக்கும் சூழல் ஏற்பட்டதாகவும் அங்கிருந்த பார்வையாளர் ஒருவர் குற்றம் சாட்டினார்.
அதனையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காகப் பொதுமக்கள் வெளியேற ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்ட பொலிஸார், அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி கூட்டத்தை சீராக வெளியேற்ற சம்பவ இடத்தில் முகாமிட்டிருந்தனர்.
Master T மற்றும் Tanya Mullings தொகுத்து வழங்கிய இந்நிகழ்வில், காரிபியன் இசை மற்றும் உணவுக் கலாச்சாரத்தைக் கொண்டாடும் வகையில் Glen Washington, Exco Levi உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
