கனடாவின் Prince George பகுதியில், 2017-ம் ஆண்டு பழங்குடியின நபரான Dale Culver பொலிச் காவலில் உயிரிழந்த வழக்கில், RCMP அதிகாரி ஒருவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.
நீதிக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக (Obstruction of Justice), கான்ஸ்டபிள் Arthur Dalman-க்கு 18 மாதங்கள் நன்னடத்தை (Probation) தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2017-ல் 35 வயதான Dale Culver கைது செய்யப்பட்டபோது, அங்கிருந்த சாட்சிகளிடம் இருந்த வீடியோ ஆதாரங்களை அழிக்குமாறு Arthur Dalman உத்தரவிட்டதாக இவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
Gitxsan மற்றும் Wet’suwet’en சமூகத்தைச் சேர்ந்த Dale Culver, கைது நடவடிக்கையின் போது பொலிசாரால் தாக்கப்பட்டதாகவும், மிளகுத்தூள் பிரயோகம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மூச்சுத்திணறல் ஏற்பட்ட 30 நிமிடங்களில் அவர் உயிரிழந்தார்.
தண்டனையின் ஒரு பகுதியாக, குறித்த அதிகாரி 150 மணிநேர சமூகச் சேவையை (Community work service) கட்டாயம் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏனைய அதிகாரிகள் விடுவிக்கப்பட்ட நிலையில், Arthur Dalman மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
