கனடாவின் மாண்ட்ரியல் (Montreal) நகரில் அமைந்துள்ள ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் (Trudeau International Airport), வசந்தகால விடுமுறை (Spring Break) காலத்தை முன்னிட்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 10 நாட்களில் நாளொன்றுக்கு சுமார் 58,000 பயணிகள் வரை விமான நிலையத்தைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமான நிலையத்தில் தற்போது நடைபெற்று வரும் பாரிய புனரமைப்புப் பணிகள் மற்றும் வாகன நிறுத்துமிடம் (Parking garage) இடிக்கப்படுவதால், வாகனங்களை நிறுத்துவதிலும் ஏற்றி இறக்குவதிலும் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
பயணிகள் தங்கள் விமான நேரத்திற்கு குறைந்தது 3 மணித்தியாலங்களுக்கு முன்னதாகவே வருமாறும், வாகன நிறுத்துமிடங்களை முன்கூட்டியே முன்பதிவு செய்யுமாறும் விமான நிலைய ஊடகப்பேச்சாளர் ஆன்-சோபி ஹேமல் (Anne-Sophie Hamel) கேட்டுக்கொண்டுள்ளார்.
சுமார் 10 பில்லியன் டொலர் செலவில் மேற்கொள்ளப்படும் இந்த விரிவாக்கப் பணிகள் 2028-ஆம் ஆண்டு நிறைவடையும் போது, தற்போதைய போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.










