டொராண்டோவின் ஸ்கார்பாரோ-சவுத்வெஸ்ட் (Scarborough-southwest) மற்றும் யுனிவர்சிட்டி-ரோஸ்டேல் (University-Rosedale) ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், முன்கூட்டியே வாக்களிப்பதற்கான (Advance voting) கடைசி நாள் இன்றாகும்.
இன்று திங்கட்கிழமை இரவு 9 மணி வரை உள்ளூர் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மார்க் கார்னியின் (Mark Carney) லிபரல் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றுத்தருமா என்பதைத் தீர்மானிக்கும் மிக முக்கிய தேர்தலாக இது பார்க்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர்களான பில் பிளேயர் (Bill Blair) மற்றும் கிறிஸ்டியா ப்ரீலாண்ட் (Chrystia Freeland) ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்ததையடுத்து இந்த இடங்கள் காலியாகின.
பிளேயர் தற்போது ஐக்கிய இராச்சியத்திற்கான கனடிய தூதராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இதேவேளை, கியூபெக்கின் டெரெபோன் (Terrebonne) தொகுதியிலும் தேர்தல் முடிவுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக மீண்டும் தேர்தல் நடைபெறவுள்ளது.
கடந்த காலங்களில் லிபரல் கட்சியின் கோட்டைகளாகத் திகழ்ந்த இந்த இரு டொராண்டோ தொகுதிகளையும் அக்கட்சி மீண்டும் கைப்பற்றினால், ஆளும் கட்சிக்கு அது பெரும் பலமாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.










