டொராண்டோ அமெரிக்க தூதரகம் மீது துப்பாக்கிச் சூடு: சந்தேகத்திற்கிடமான வாகனத்தின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டனர்!

டொராண்டோ (Toronto) நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் (U.S. Consulate) மீது செவ்வாய்க்கிழமை அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேக நபர் பயணித்த வாகனத்தின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

அதிகாலை 4:30 மணியளவில் University Avenue மற்றும் Queen Street West பகுதியில் உள்ள தூதரகக் கட்டடத்தின் மீது இரண்டு நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர்.

இது ஒரு “தேசிய பாதுகாப்பு விவகாரம்” என ராயல் கனடியன் மவுண்டட் பொலிஸ் (RCMP) தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து டொராண்டோ மற்றும் ஒட்டாவாவில் (Ottawa) உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தூதரகங்களுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் ஜி.டி.ஏ (GTA) பகுதிகளில் உள்ள யூத வழிபாட்டுத் தலங்களில் (Synagogues) நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களுடன் இதற்குத் தொடர்புள்ளதா என்பது குறித்தும் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

Latest Articles