ஜிடிஏ பகுதியில் எரிபொருள் விலை அதிரடி உயர்வு – ஈரானுடனான போர்நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக டிரம்ப் அறிவிப்பு!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) அறிவித்துள்ளதை அடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.

இதன் தாக்கமாக, பெரும் றொரண்டோ பகுதி (GTA) முழுவதும் எரிபொருள் விலைகள் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்துப் பேசிய Canadians for Affordable Energy அமைப்பின் தலைவர் டான் மெக்டேக் (Dan McTeague), வெள்ளிக்கிழமை முதல் ஒரு லீட்டர் பெட்ரோல் விலை 5 காசுகள் உயர்ந்து 169.9 காசுகளாகவும், டீசல் விலை 13 காசுகள் உயர்ந்து 198.9 காசுகளாகவும் அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், வார இறுதி நாட்களில் பெட்ரோல் விலை மேலும் 5 காசுகள் அல்லது அதற்கும் மேலாக உயரக்கூடும் என்பதால், வாகன சாரதிகள் வியாழக்கிழமையே தங்களது வாகனங்களுக்கு எரிபொருளை நிரப்பிக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

வரவிருக்கும் நாட்களில் ஒட்டுமொத்தமாக லீட்டருக்கு 10 முதல் 15 காசுகள் வரை விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான 60 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு 18 நாட்களே ஆன நிலையில், ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களை அடுத்து, இந்த ஒப்பந்தம் “முடிவுக்கு வந்துவிட்டது” என டிரம்ப் அறிவித்துள்ளார்.

உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை நிலவி வரும் சூழலில், இந்த புதிய பதற்றம் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03
Video thumbnail
WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!
01:19
Video thumbnail
மழை வெள்ளத்தில் மூழ்கிய Niagara - St. Catharines, Lincoln நகரங்களில் அவசரநிலை!
00:57
Video thumbnail
'Toronto Islands' போலி Ferry Tickets விற்கும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை!
01:24

Related Articles

Latest Articles