சட்டவிரோத லொப்ஸ்டர் விற்பனைக்கு முற்றுப்புள்ளி!

நியூ பிரன்சுவிக் (New Brunswick) மாகாண அரசு புதிய விசேட அமலாக்கப் பிரிவு ஒன்றை உருவாக்கியுள்ளது.

அதன்படி, அட்லாண்டிக் கனடா பிராந்தியத்தில் சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்டு, கணக்கில் காட்டப்படாமல் விற்பனை செய்யப்படும் லொப்ஸ்டர் (Lobster) வணிகத்தைக் கட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நோவா ஸ்கோடியா (Nova Scotia) மாகாணத்தைத் தொடர்ந்து இவ்வாறான முடிவை நியூ பிரன்சுவிக் எடுத்துள்ளது.

ஏப்ரல் 1 முதல் அமுலுக்கு வந்துள்ள இந்தத் திட்டத்தின் கீழ், ஐந்து விசேட அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, லொப்ஸ்டர் தரையிறக்கம் மற்றும் கையிருப்பு ஆகியவற்றைத் தீவிரமாகக் கண்காணிப்பார்கள்.

இந்தச் சட்டவிரோத விற்பனையால் நியூ பிரன்சுவிக் மாகாணத்திற்கு ஆண்டுதோறும் 5 முதல் 7 மில்லியன் டொலர் வரை வரி வருவாய் இழப்பு ஏற்படுவதாகப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கௌவின் (Robert Gauvin) தெரிவித்துள்ளார்.

நோவா ஸ்கோடியாவைப் பொறுத்தவரை இந்த இழப்பு சுமார் 400 மில்லியன் டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“எங்களிடம் உரிமம் வைத்திருக்கும் எவரும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவார்கள்” என்று தெரிவித்த அமைச்சர், இந்தப் பிரிவு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் இலக்கு வைக்காது என உறுதியளித்துள்ளார்.

சுமார் $667,000 செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பிரிவு, மத்திய மீன்வளத் துறையுடன் (DFO) இணைந்து செயற்படும்.

லொப்ஸ்டர் தொழில்துறையின் நிலையான தன்மை மற்றும் துல்லியமான தரவுகளைப் பேணுவதற்கு இந்த நடவடிக்கை மிக அவசியம் என லொப்ஸ்டர் கவுன்சில் (Lobster Council of Canada) வரவேற்புத் தெரிவித்துள்ளது.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles