கனடா வரலாற்றில் சாதனை: $90 மில்லியன் லொட்டரி பரிசை வென்ற 4 நண்பர்கள்!

citynews

கனடா வரலாற்றிலேயே மிகப்பெரிய தொகையான 90 மில்லியன் டொலர் லொட்டோ மெக்ஸ் (Lotto Max) ஜாக்பாட் பரிசை கால்கரி (Calgary) நகரைச் சேர்ந்த நான்கு நண்பர்கள் வென்றுள்ளனர்.

ஒக்டோபர் 20ஆம் திகதி குலுக்கல் மூலம் இந்த வெற்றி அறிவிக்கப்பட்ட போதிலும், வெற்றியாளர்களின் விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

எய்டல்சன் எல்சிகோ (Eidelson Elchico), லவ்லின் மால்வர் (Lovelyn Malvar), ஹேஸலின் ஓங் (Hazeline Ong) மற்றும் வெல்னா ராமிரெஸ் (Velna Ramirez) ஆகிய நீண்டகால நண்பர்களே இந்தப் பரிசை வென்றவர்களாவர்.

“Manifesting Millions” என்ற பெயரிலான வாட்ஸ்அப் குழுவை அமைத்து லொட்டரி சீட்டுகளை வாங்கி வந்த இவர்கள், ஒக்டோபர் 20 அதிகாலை 3 மணியளவில் சீட்டைச் சரிபார்த்தபோதே தாங்கள் இமாலயப் பரிசை வென்றுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்தத் தொகை மூலம் தங்களின் வீட்டுக் கடன்களை அடைத்து, குடும்பத்தினருக்கு உதவுவதுடன், சமூகத்திற்குப் பயனுள்ள பல நற்பணிகளைச் செய்யவுள்ளதாக வெற்றியாளர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

Previous articleஇராணுவத்தினருக்கான பாதுகாப்பு ஒப்பந்தத்தை இழந்த கனடிய நிறுவனம்!
Next articleவான்கூவரில் வெள்ளப்பெருக்கு : 22 வீடுகளுக்கு உடனடியாக வெளியேறுமாறு உத்தியோகபூர்வ உத்தரவு