கனடா தினத்தில் மாயமான 7 வயது சிறுவனின் சடலம் மீட்பு!

நெத்தானியேல் செலாம்பி (Nathanael Selambi) என்ற 7 வயது சிறுவன், கடந்த புதன்கிழமை (கனடா தினம்) மதியம் 3 மணியளவில் பின்ப்ரூக் பாதுகாப்புப் பகுதியில் (Binbrook Conservation Area) திடீரென காணாமல் போயுள்ளான்.

இதனைத் தொடர்ந்து ப்பீல் பிராந்திய பொலிஸார் (Peel Regional Police) நீருக்கடியிலான தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்று (வியாழக்கிழமை) மதியம் 1:30 மணியளவில் அச்சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

இந்த மரணத்தில் எவ்வித சந்தேகத்திற்கிடமான பின்னணியும் இல்லை என ஹெமில்டன் பொலிஸார் (Hamilton Police Service) தெரிவித்துள்ளனர்.

சிறுவனின் இந்த திடீர் இழப்புக்கு ஹெமில்டன் மேயர் ஆண்ட்ரியா ஹார்வத் (Andrea Horwath) மற்றும் பல சமூகத் தலைவர்கள் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தேடுதல் பணியில் உதவிய பொதுமக்களுக்கும் அவசர உதவிப் பிரிவினருக்கும் பொலிஸார் நன்றி தெரிவித்துள்ளனர்.

Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03
Video thumbnail
WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!
01:19
Video thumbnail
மழை வெள்ளத்தில் மூழ்கிய Niagara - St. Catharines, Lincoln நகரங்களில் அவசரநிலை!
00:57
Video thumbnail
'Toronto Islands' போலி Ferry Tickets விற்கும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை!
01:24

Related Articles

Latest Articles