கனடா – டெக்சாஸ் வர்த்தகம் – அமெரிக்கர்களிடையே நிலவும் அறியாமை குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை!

கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தக உறவுகள் குறித்து அமெரிக்க மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என்றும், இதனை மேம்படுத்த கனடா அதிக முதலீடு செய்ய வேண்டும் என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

டெக்சாஸ் (Texas) மாநிலத்தின் இரண்டாவது பெரிய வர்த்தகக் கூட்டாளி கனடா ஆகும். 2024 ஆம் ஆண்டில் மட்டும் டெக்சாஸ் கனடாவிடமிருந்து 38.6 பில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.

அதேபோல், 36.6 பில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை கனடாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

இவ்வளவு பெரிய வர்த்தகப் பரிமாற்றம் இருந்தபோதிலும், டெக்சாஸில் உள்ள பலருக்கு கனடாவுடனான இந்த உறவு பற்றித் தெரியவில்லை.

எரிசக்தி மற்றும் வாகனத் துறையில் இரு நாடுகளும் பின்னிப் பிணைந்துள்ளன.

கனடா-அமெரிக்க உறவுகள் குறித்த நிபுணர் லாரா டாசன் (Laura Dawson) கூறுகையில், கனடா நீண்டகாலமாக தனது பங்களிப்புகளை அமைதியாகச் செய்து வந்ததாகவும், இனி அந்த அணுகுமுறை பலன் தராது என்றும் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் அமெரிக்காவில் தங்களது வர்த்தக முக்கியத்துவத்தை விளம்பரப்படுத்துவது போல கனடாவும் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் (Donald Trump) வர்த்தகக் கொள்கைகள் மற்றும் CUSMA வர்த்தக ஒப்பந்தத்தின் மீளாய்வு வரவுள்ள நிலையில், கனடா தனது முக்கியத்துவத்தை அமெரிக்கர்களிடம் உரக்கச் சொல்ல வேண்டியது அவசியமாகிறது.

பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) வர்த்தகச் சந்தைகளை பன்முகப்படுத்த முயன்றாலும், புவியியல் ரீதியாக அமெரிக்காவுடனான வர்த்தகம் கனடாவுக்கு என்றும் முக்கியமானது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles