கனடாவில் Google பயன்படுத்தும் புதிய AI தொழில்நுட்பம், பயனர்கள் 18 வயதுக்கு குறைவானவர்களா என்பதை தானாக கண்டறியத் தொடங்க உள்ளது.
இந்த Age Assurance Technology, பயனரின் Google account-இல் ஏற்கனவே உள்ள சில தகவல்களை Machine Learning மூலம் ஆய்வு செய்யும்.
உதாரணமாக, ஒருவர் என்ன தேடுகிறார், YouTube-ல் எந்த வகையான வீடியோக்களை பார்க்கிறார் போன்ற signals-ஐ பயன்படுத்தி அவர்களின் வயதை கணிக்க முயலும்.
ஒருவர் 18 வயதுக்கு குறைவானவர் என Google கருதினால், அந்த account-இல் கூடுதல் பாதுகாப்புகள் automatically அமல்படுத்தப்படும்.
குறிப்பாக content recommendations உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் safeguards வழங்கப்படும்.
ஆனால், ஒரு வயது வந்த நபரை தவறுதலாக under 18 என Google அடையாளம் கண்டால் என்ன செய்வது?
அவர் Government ID அல்லது Selfie மூலம் தனது வயதை நிரூபிக்க முடியும் என Google தெரிவித்துள்ளது.
மேலும், இந்த தொழில்நுட்பத்திற்காக புதிதாக தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கப்போவதில்லை என்றும், ஏற்கனவே account-உடன் தொடர்புடைய தகவல்களையே பயன்படுத்துவதாக Google Canada தெரிவித்துள்ளது.
இந்த வசதி வரும் நாட்களில் கனடாவில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதேபோல் Meta நிறுவனமும் AI மூலம் underage users-ஐ அடையாளம் கண்டு Teen Accounts-க்கு மாற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது.
இதற்கிடையில், கனடாவின் Digital Safety Bill C-34 இன்னும் சட்டமாகாத நிலையில், 16 வயதுக்குட்பட்டவர்கள் social media பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வர அரசு முயற்சித்து வருகிறது.
