ஒன்றாரியோ முதல்வர் அலுவலகத்தில் பணியாளர்கள் குறைப்பு – ஒரு மில்லியன் டொலர் சேமிப்பு!

கனடாவின் (Canada) ஒன்றாரியோ (Ontario) மாகாண முதல்வர் Doug Ford இன் அலுவலகத்தில், செலவுகளைக் குறைக்கும் நோக்கில் 10 பணியிடங்கள் நீக்கப்பட்டு, புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் தலைமை அதிகாரி Travis Kann வெளியிட்டுள்ள குறிப்பின்படி, இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் மாகாண அரசுக்கு ஆண்டுதோறும் 1,074,500 டொலர்கள் சேமிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பின் பின்னர், பொதுச் சேவைகளில் ஒழுக்கத்தையும் திறனையும் பேணும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குறைப்பு நடவடிக்கைகள் குறித்துப் பேசிய முதல்வர் Doug Ford, “நிர்வாகத் திறனை மேம்படுத்தி, மக்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்பதற்காகவே தலைமை அதிகாரியிடம் ஒரு மில்லியன் டொலர் சேமிப்பை இலக்காகக் கொண்டு இந்த மாற்றங்களைச் செய்யப் பணித்தேன்” எனக் கூறியுள்ளார்.

இதேபோன்ற சிக்கன நடவடிக்கைகளை ஏனைய அமைச்சு அலுவலகங்களிலும் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles