ஒன்ராறியோவில் காரியர் கல்லூரிகளுக்கு எதிரான அதிரடி நடவடிக்கை: OSAP தடை நீட்டிப்பு!

ctvnews

கனடாவின் ஒன்ராறியோ (Ontario) மாகாணத்தில் உள்ள மூன்று Academy of Learning கிளைகளுக்கு வழங்கப்பட்டு வந்த OSAP (Ontario Student Assistance Program) நிதி உதவிக்கான தடை, மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் Nolan Quinn தலைமையிலான இந்த நடவடிக்கையால், இக்கல்லூரிகள் 2030-ஆம் ஆண்டு வரை பொது நிதி உதவி பெற முடியாத நிலை உருவாகியுள்ளது.

மூன்றாம் தரப்பினர் மாணவர்களின் பெயரில் பாடங்களை முடித்தல் மற்றும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் கல்லூரியின் பெயரைக் கூறத் தவறியது போன்ற முறைகேடுகள் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன.

சந்தேகத்திற்கிடமான அழைப்புகளால் மாணவர்கள் பதிலளிக்கவில்லை என்றும், offline  இல் படிக்க மாணவர்கள் பொருட்களை பதிவிறக்கம் செய்ததே விரைவான பாட முடிப்புக்குக் காரணம் என்றும் கல்லூரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

KPMG தணிக்கை நிறுவனத்தின் தீவிரக் கண்காணிப்புக்களை தொடர்ந்து, இந்த விவகாரம் ஒன்ராறியோ மாகாணக் காவல்துறையான Ontario Provincial Police  விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

தணிக்கை முடியும் வரை அனைத்து தனியார் மற்றும் காரியர் கல்லூரிகளுக்குமான OSAP கடன் கொடுப்பனவுகள் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

Previous articleஒன்ராறியோவில் $4.6 மில்லியன் கஞ்சா பறிமுதல்! இருவர் கைது, ஒருவர் தப்பியோட்டம்!
Next articleபிரபல கனேடிய இசைக் கலைஞர் Joni Mitchell அமெரிக்கக் குடிமகளானார்!