உணவகத்திற்கு எதிராக ‘போலி பிரச்சாரம்’  ஒன்றிணைந்து பதிலடி கொடுத்த மக்கள்!

ஒன்டாரியோவின் லண்டன் (London, Ont.) மாநகரில் உள்ள பய்ரன் (Byron) பகுதியில், கடந்த ஆறு ஆண்டுகளாகச் இயங்கி வரும் லியோஸ் பீட்சா (Leo’s Pizza) உணவகத்தின் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கில் திட்டமிட்ட “விமர்சனத் தாக்குதல்” (Review bombing) நடத்தப்பட்டுள்ளது.

ஒரே நாளில் ஒன்பதுக்கும் மேற்பட்ட ஒரு நட்சத்திர (One-star) போலி விமர்சனங்கள் பதிவிடப்பட்டதைக் கண்டு அதன் உரிமையாளர் டேமன் அடேயி (Damon Ataei) அதிர்ச்சியடைந்தார்.

இந்தத் தாக்குதலைச் சமாளிக்க அவர் கூகுள் (Google) நிறுவனத்தின் உதவியை நாடியபோதும், தானியங்கி பதில்கள் மட்டுமே கிடைத்ததால் ஏமாற்றமடைந்தார்.

இதனையடுத்து, அவர் ‘பய்ரன் நெய்பர்ஸ்’ (Byron Neighbours) முகநூல் பக்கத்தில் தனது குமுறலைப் பதிவிட்டார்.

இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள், உடனடியாகத் திரண்டு லியோஸ் பீட்சாவிற்கு ஆதரவாக 150-க்கும் மேற்பட்ட ஐந்து நட்சத்திர (Five-star) விமர்சனங்களை வாரி வழங்கினர்.

மக்களின் இந்த அதிரடி ஆதரவால், அந்த உணவகத்தின் மதிப்பீடு மீண்டும் 4.8 ஆக உயர்ந்தது.

“பய்ரன் மக்கள் காட்டிய இந்த அன்பு நெகிழ்ச்சியளிக்கிறது” என அடேயி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாகப் போராடிப் பெற்ற நற்பெயரைச் சில நிமிடங்களில் சிதைக்க முயன்றவர்களுக்கு, ஒரு சமூகமாக ஒன்றிணைந்து மக்கள் கொடுத்த இந்தப் பதிலடி தற்போது பேசுபொருளாகியுள்ளது.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles