அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தொடுத்த வர்த்தகப் போருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஒன்டாரியோ (Ontario) அரசு அந்நாட்டு மதுபானங்களை விற்பனையிலிருந்து நீக்கியது.
அவ்வாறு நீக்கப்பட்டு, கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்க மதுபானங்களுக்கான சேமிப்புக் கட்டணம் தற்போது $8 மில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.
ஒன்டாரியோ மதுபானக் கட்டுப்பாட்டு வாரியம் (LCBO) இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
பிராக் பல்கலைக்கழகத்தின் (Brock University) பேராசிரியர் மைக்கேல் ஆம்ஸ்ட்ராங் (Michael Armstrong) கூறுகையில், இந்த விவகாரத்தால் மாதத்திற்கு கிட்டத்தட்ட $1 மில்லியன் டொலர் வரை செலவாவதாக கூறியுள்ளார்.
இது இறுதியில் ஒன்டாரியோ வரி செலுத்துவோரின் பணத்தையே பாதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்த இருப்புகளை உடனடியாக விற்றுவிடுவது நல்லது என அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கிடையில், சேமிப்பில் இருந்த சுமார் $2.6 மில்லியன் டொலர் மதிப்புள்ள மதுபானங்கள் காலாவதியாகியுள்ளன.
இதனால் ஒட்டுமொத்த இழப்பு $10 மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இருப்பினும், 97 சதவீத பொருட்கள் இன்னும் நல்ல நிலையில் இருப்பதாக LCBO தெரிவித்துள்ளது.
மறுபுறம், அமெரிக்கா தனது வரிகளை நீக்கும் வரை இந்த மதுபானங்கள் மீண்டும் விற்பனைக்கு வராது என ஒன்டாரியோ நிதியமைச்சர் பீட்டர் பெத்லன்பால்வி (Peter Bethlenfalvy) அலுவலகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
