வெஸ்ட்லாக் தியான மையத்தில் கூடார சரிவு விபத்து – வாடகை நிறுவனத்தின் மீது 10 குற்றச்சாட்டுகள் பதிவு!

அல்பர்ட்டா (Alberta) மாகாணத்தின் வெஸ்ட்லாக் தியான மையத்தில் (Westlock Meditation Centre) 2024 ஆம் ஆண்டு நிகழ்ந்த உயிரிழப்புடன் கூடிய கூடார சரிவு விபத்து தொடர்பாக, ஒரு தனியார் வாடகை நிறுவனம் மீது தற்போது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

2024, ஜூலை 31 அன்று நடைபெற்ற இந்தத் தியான முகாமின் போது, பலத்த காற்றினால் பிரம்மாண்டமான கூடாரம் சரிந்து விழுந்ததில், மினசோட்டாவைச் (Minnesota) சேர்ந்த வேலரி பாம் (Valerie Pham) என்ற 40 வயது பெண் உயிரிழந்தார். மேலும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள், ‘அல்பர்ட்டா ஸ்பெஷல் ஈவென்ட் எக்யூப்மென்ட் ரெண்டல்ஸ் மற்றும் சேல்ஸ் லிமிடெட்’ (Alberta Special Event Equipment Rentals & Sales Ltd.) நிறுவனம், கூடாரத்தை முறையாகவும் பாதுகாப்பாகவும் நிறுவவில்லை எனக் கண்டறிந்துள்ளனர்.

தயாரிப்பாளரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறியது மற்றும் முறையான நங்கூரங்கள் (anchors) இடாதது உள்ளிட்ட 10 குற்றச்சாட்டுகள் அந்நிறுவனத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளன.

சுமார் 400 பேர் பங்கேற்ற இந்த முகாமில், விபத்து நடந்த நேரத்தில் 100 முதல் 200 பேர் கூடாரத்திற்குள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் ஏப்ரல் 22 அன்று வெஸ்ட்லாக் (Westlock) நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03
Video thumbnail
WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!
01:19
Video thumbnail
மழை வெள்ளத்தில் மூழ்கிய Niagara - St. Catharines, Lincoln நகரங்களில் அவசரநிலை!
00:57
Video thumbnail
'Toronto Islands' போலி Ferry Tickets விற்கும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை!
01:24

Related Articles

Latest Articles