Toronto மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வரும் நாட்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதன்படி, இன்று மதியம் முதல் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கும். சுமார் 10 முதல் 15 மில்லிமீட்டர் வரை மழைப்பொழிவு பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 4°C முதல் 5°C வரை வெப்பநிலை நிலவும். பனிப்பொழிவுக்குப் பதிலாகத் தொடர்ச்சியான மழை பெய்யும் என வானிலை நிபுணர் Denise Andreacchi தெரிவித்துள்ளார்.
இந்த வாரத்தின் சனிக்கிழமை மிகவும் இதமான நாளாக அமையும். அன்றைய தினம் வெப்பநிலை 14°C வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
இது வழக்கமான பருவகால வெப்பநிலையை விட அதிகமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை மேகமூட்டத்துடன் கூடிய ஓரளவு தெளிவான வானிலை நிலவும், அன்று 10°C வெப்பநிலை பதிவாகும் என எதிர்வு கூறியுள்ளார்.
Toronto மக்கள் மழையிலிருந்து தற்காத்துக் கொள்ளத் தயாராக இருக்கும் அதேநேரம், வார இறுதியில் நிலவும் அசாதாரண வெப்பநிலையை அனுபவிக்கத் தயாராகுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
