வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் – ஒருவர் உயிரிழப்பு!

கனடாவின் British Columbia மாகாணத்தில், நடுவானில் இரண்டு சிறிய விமானங்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Chilliwack விமான நிலையத்திற்கு அருகே, ஆகஸ்ட் 3ஆம் திகதி மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு வெவ்வேறு விமானப் பயிற்சிப் பள்ளிகளைச் சேர்ந்த Cessna 172 ரக விமானங்கள் வானில் பறந்துகொண்டிருந்தபோது ஒன்றுடன் ஒன்று மோதியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான விமானங்களில் ஒன்று, Chilliwack பகுதியில் உள்ள குளம் ஒன்றில் விழுந்துள்ளது. மீட்புக் குழுவினர் விமானத்திற்குள் இருந்து உயிரிழந்த ஆண் ஒருவரின் உடலை மீட்டுள்ளனர்.

மோதலில் சிக்கிய இரண்டாவது விமானம், சேதத்துடன் மீண்டும் Chilliwack விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. அந்த விமானத்திலிருந்த இரண்டு பேருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது இதுவரை தெரியவரவில்லை. கனடாவின் Transportation Safety Board அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், தீவிர விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles