றொரண்டோ வீதிகள் மோசம் – ஹாமில்ட்டனின் பார்டன் வீதி மீண்டும் முதலிடம்!

ஒன்றாரியோ (Ontario) மாகாணத்தின் மிக மோசமான வீதிகளைத் தேர்ந்தெடுக்கும் 2026ஆம் ஆண்டுக்கான CAA (CAA Worst Roads) கருத்துக் கணிப்பில், ஹாமில்ட்டன் (Hamilton) நகரில் உள்ள பார்டன் ஸ்ட்ரீட் ஈஸ்ட் (Barton Street East) வீதி தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட ஆயிரக்கணக்கான வாக்குகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

குன்றும் குழியுமான பாதைகள், சீரற்ற மேற்பரப்பு மற்றும் பராமரிப்பின்மை காரணமாக மக்கள் எதிர்கொள்ளும் பெரும் விரக்தியை இந்த முடிவு காட்டுவதாக CAA அமைப்பின் அரசாங்க உறவுகள் ஆலோசகர் பிரையன் பிர்வு (Brian Pirvu) தெரிவித்துள்ளார்.

இந்த பட்டியலில் றொரண்டோ (Toronto) நகரின் 4 முக்கிய வீதிகள் உள்ளிட்ட மாகாணத்தின் 10 மோசமான வீதிகள்,

Barton Street East, Hamilton

Hurontario Street, Mississauga

Notre Dame Avenue, Greater Sudbury

Sider Road, Fort Erie

Steeles Avenue East, Toronto

Sheppard Avenue West, Toronto

Panache Lake Road, Greater Sudbury

Bathurst Street, Toronto

Unwin Avenue, Toronto

6th Line, Innisfil

என்ற ஒழுங்கில் பெயரிடப்பட்டுள்ளன.

மக்களின் இந்த குரல், வீதிகளைப் பாதுகாப்பானதாக மாற்ற அரசாங்கம் எங்கு முதலீடு செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள உதவும் என CAA அமைப்பு தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles